சரக்கு ஆட்டோ மீது தனியார் பஸ் மோதி விபத்து
சரக்கு ஆட்டோ மீது தனியார் பஸ் மோதி விபத்து
கிணத்துக்கடவு
கோவை-பொள்ளாச்சி 4 வழிச்சாலையில் கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையம் சேரன்நகரில் பாலம் உள்ளது. இந்த பாலத்தில் பொள்ளாச்சி நோக்கி சரக்கு ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த தனியார் பஸ் ஒன்று, முந்தி செல்ல முயன்றபோது கண்ணிமைக்கும் நேரத்தில் சரக்கு ஆட்டோ மீது மோதியது. இதில் சரக்கு ஆட்டோ நடுரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சரக்கு ஆட்டோ டிரைவர் லேசான காயத்துடன் உயிர்தப்பினார்.
இந்த விபத்தின் காரணமாக கோவை-பொள்ளாச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வடக்கிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவிழ்ந்து கிடந்த சரக்கு ஆட்டோவை அகற்றினர். இதையடுத்து போக்குவரத்து சீரானது. இதுகுறித்து வடக்கிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை-பொள்ளாச்சி 4 வழிச்சாலையில் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருவதால், அதனை தடுக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.