சாலையில் குறுக்கே மாடு வந்ததால் தனியார் கம்பெனி வேன் கவிழ்ந்து காவலாளி பலி


சாலையில் குறுக்கே மாடு வந்ததால் தனியார் கம்பெனி வேன் கவிழ்ந்து காவலாளி பலி
x

மறைமலைநகரில் சாலையில் குறுக்கே திடீரென மாடு வந்ததால் தனியார் கம்பெனி வேன் கவிழ்ந்து அதில் பயணம் செய்த காவலாளி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

செங்கல்பட்டு

மறைமலைநகர்,

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் தொழிற்பேட்டையில் ஒரு தனியார் கம்பெனி உள்ளது. அங்கிருந்து 3 பெண்கள் மற்றும் கம்பெனி காவலாளி குமரேசன் (வயது 50) ஆகியோரை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் அதே கம்பெனியின் மற்றொரு கிளைக்கு சென்று கொண்டிருந்தது.

வேன் மறைமலைநகர் போலீஸ் நிலையம் அருகே செல்லும்போது திடீரென மாடு குறுக்கே வந்தது. இதனால் வேன் டிரைவர் மாடின் மீது மோதாமல் இருப்பதற்காக வேனை திருப்ப முயன்றார். அப்போது வேன் தலகுப்புற சாலையில் கவிழ்ந்தது.

இதில் வேனில் வந்த கம்பெனி காவலாளி குமரேசன் உடல் நசங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். வேனில் பயணம் செய்த 3 பெண் தொழிலாளர்களும் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த பெண்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான குமரேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு தப்பி ஓடிய வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story