மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த தனியார் தொலைக்காட்சி ஊழியர் பலி..!


மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த தனியார் தொலைக்காட்சி ஊழியர் பலி..!
x

சென்னை எம்ஜிஆர் நகரில் மழை நீர் வடிகாலில் விழுந்து தனியார் தொலைக்காட்சி ஊழியர் உயிரிழந்தார்.

சென்னை:

சென்னை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை எம்ஜிஆர் நகரில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

சென்னை பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றும் முத்துக்கிருஷ்ணன் என்பவர் நேற்று இரவு பணி முடிந்து சென்றுள்ளார். அப்போது சென்னை எம்ஜிஆர் நகரில் தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். இதில் பள்ளத்தில் உள்ள இரும்பு கம்பிகள் முத்துக்கிருஷ்ணனின் உடலில் குத்தி படுகாயம் அடைந்தார்.

உடனே படுகாயமடைந்த முத்துக்கிருஷ்ணனை ஆம்புலன்ஸ் மூலம் சென்னை இராயப்பேட்டை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தகவல் அறிந்த காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரடியாக இராயப்பேட்டை மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிச்சை அளிக்குமாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பல மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையின் இன்று சிகிச்சை பலனின்று உயிரிழந்ததுள்ளார்.

சென்னை மாநகர் முழுவதும் இதுபோன்ற பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ள நிலையில் தனியார் தொலைக்காட்சி ஊழியர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story