நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி
நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
சேலம்
தமிழகம் முழுவதும் நீட் தேர்வால் உயிரிழந்த மாணவ, மாணவிகளின் நினைவாக அவர்களுக்கு தமிழ்நாடு அனைத்து மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று வீரவணக்க நாள் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. சேலம் அண்ணா பூங்கா அருேக உள்ள கருணாநிதியின் சிலை முன்பு அனைத்து மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்பட்டது. நீட் தேர்வால் உயிரிழந்த அரியலூர் அனிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தி.மு.க. மாணவர் அணி மாநில துணை செயலாளர் தமிழரசன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் தினேஷ், தி.மு.க. மாணவர் அணி மத்திய மாவட்ட அமைப்பாளர் கோகுல் காளிதாஸ், துணை அமைப்பாளர்கள் சிங்காரம், முகேஷ் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story