பசுமை திட்டத்தின் கீழ் ஹைட்ரஜன் மூலம் நீலகிரி மலை ரெயிலை இயக்க திட்டம்


பசுமை திட்டத்தின் கீழ்  ஹைட்ரஜன் மூலம் நீலகிரி மலை ரெயிலை இயக்க திட்டம்
x
தினத்தந்தி 25 Aug 2023 1:00 AM IST (Updated: 25 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

பசுமை திட்டத்தின் கீழ் ஹைட்ரஜன் மூலம் நீலகிரி மலை ரெயிலை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீலகிரி

குன்னூர்

பசுமை திட்டத்தின் கீழ் ஹைட்ரஜன் மூலம் நீலகிரி மலை ரெயிலை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீலகிரி மலை ரெயில்

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் அம்சங்களில் ஒன்றாக நீலகிரி மலை ரெயில் உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த மலை ரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி பொதுமக்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆரம்ப கால கட்டத்தில் மலை ரெயில்களின் இயக்கம் நிலக்கரி நீராவி என்ஜின் மூலம் இயக்கப்பட்டு வந்தது .தற்போது பர்னஸ் ஆயில் மற்றும் டீசல் என்ஜின்கள் பயன்படுத்தி இயக்கப்பட்டு வருகிறது.

மேட்டுப்பாளையம் -குன்னூர் மற்றும் குன்னூர் -மேட்டுப்பாளையம் இடையே பர்னஸ் ஆயில் நீராவி என்ஜின் மூலமாகவும், குன்னூர்- ஊட்டி மற்றும் ஊட்டி0 குன்னூர் இடையே டீசல் என்ஜின் மூலமாகவும் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

ஹைட்ரஜன் மூலம் இயங்கும்

இந்த நிலையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் 8 இடங்களில் 35 ரெயில்களை ஹைட்ரஜன் மூலம் இயக்க மத்திய ரெயில்வே துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதில் நீலகிரி மலை ரெயில் உட்பட 8 பாரம்பரிய ெரயில்களை பசுமை ெரயில் திட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் ரூ.80 கோடி மதிப்பீட்டில் நீலகிரி மலை ெரயில் பாதையில் ஹைட்ரஜனில் இயங்கும் என்ஜினை பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது.

ஹைட்ரஜன் மூலம் இயங்கும் வகையில் பாரம்பரியம் மாறாமல் ரெயில் என்ஜின்களை மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது. இந்த தகவலை ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story