கரும்பு தோட்டத்துக்குள் புகுந்த மலைப்பாம்பு


கரும்பு தோட்டத்துக்குள் புகுந்த மலைப்பாம்பு
x

கரும்பு தோட்டத்துக்குள் புகுந்த மலைப்பாம்பு

ஈரோடு

தாளவாடி

தாளவாடியை அடுத்த ஆசனூர் அருகே உள்ள அரேபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. விவசாயி. இவர் தன்னுடைய தோட்டத்தில் கரும்பு சாகுபடி செய்து உள்ளார். கடந்த சில நாட்களாக கரும்பு அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. வழக்கம்போல் நேற்றும் கரும்பு அறுவடை பணி நடைபெற்றது. இந்த பணியில் 8-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்போது தோட்டத்தில் மலைப்பாம்பு ஒன்று இருந்ததை கண்டு கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இதுகுறித்து ஆசனூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பிடிபட்ட மலைப்பாம்பு 7 அடி நீளம் உள்ளது ஆகும். இதைத்தொடர்ந்து மலைப்பாம்பை வனத்துறையினரிடம் தீயணைப்பு வீரர்கள் ஒப்படைத்தனர்.


Next Story