திருத்துறைப்பூண்டியில் ரெயில்வே மேம்பாலம் கட்டித்தர வேண்டும்


திருத்துறைப்பூண்டியில் ரெயில்வே மேம்பாலம் கட்டித்தர வேண்டும்
x

திருத்துறைப்பூண்டியில் ரெயில்வே மேம்பாலம் கட்டித்தர வேண்டும்

திருவாரூர்

அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே திருத்துறைப்பூண்டியில் ரெயில்வே மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து நெரிசல்

திருத்துறைப்பூண்டியில் ெரயில் நிலையம் உள்ளது. இந்த ெரயில்வே கேட் திருத்துறைப்பூண்டி- மன்னார்குடி சாலையில் அமைந்துள்ளது. திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடி செல்லும் வாகனங்கள் அனைத்தும் இந்த ெரயில்வே கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும். மேலும் வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், நாகூர், கோடியக்கரை, கோடியக்காடு, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் வரும் வாகனங்களும் இந்த ரெயில்வே கேட் வழியாக தான் செல்ல வேண்டும்.

இந்த ெரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் சாலையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருந்து செல்லும் நிலை உள்ளதால் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்க திருத்துறைப்பூண்டியில் ரெயில்வே மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரெயில்வே மேம்பாலம்

இதுகுறித்து திருத்துறைப்பூண்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வன் கூறுகையில், திருத்துறைப்பூண்டி நகரத்திலும், அதன் சுற்று கிராமத்திலும் ஏராளமான பொதுமக்கள் வசிக்கின்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்வோர், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வெளிமாநிலங்கள் வெளி மாவட்டங்களில் இருந்து சுற்றுலா செல்பவர்கள் உள்ளிட்ட அனைவரும் திருத்துறைப்பூண்டி நகரத்தை கடந்து செல்ல வேண்டும். ஆனால் அடிக்கடி ெரயில்வே கேட் மூடுவதால் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஒரு சில நேரங்களில் அரசு ஆம்புலன்ஸ் கூட போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ளும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ெரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றார்.

வாகன ஓட்டிகள் அவதி

இதுகுறித்து திருத்துறைப்பூண்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் பாலு கூறுகையில், திருத்துறைப்பூண்டியில் அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இந்த நெரிசலில் சிக்கி கொள்வதால் மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள் உடனடியாக செல்ல முடியாமல் அங்கேயே காத்து நிற்கும் அவலம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக ெரயில்வே மேம்பாலம் அமைத்து போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என்றார்.


Next Story