சத்தியமங்கலத்தில் அரிய வகை ஆந்தை பிடிபட்டது

சத்தியமங்கலத்தில் அரிய வகை ஆந்தை பிடிபட்டது
x

சத்தியமங்கலத்தில் அரிய வகை ஆந்தை பிடிபட்டது

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் கடைவீதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் பகுதியில் அரிய வகை பறவை ஒன்று பறந்து வந்து சுவற்றில் நின்றது. இதை பார்த்த அங்கிருந்தவர்கள் சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்று பறவையை பிடித்தனர். அப்போது அது ஒரு அரிய வகை ஆந்தை என வனத்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து அந்த ஆந்தை சத்தியமங்கலம் வனப்பகுதியில் விடப்பட்டது.

Next Story