அரிய வகை வெள்ளை நாகம் பிடிபட்டது


அரிய வகை வெள்ளை நாகம் பிடிபட்டது
x
தினத்தந்தி 5 May 2023 1:00 AM IST (Updated: 5 May 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

அரிய வகை வெள்ளை நாகம் பிடிபட்டது

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினமும் மாநகர பகுதியில் பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக நீரோடைகளில் மழைநீர் அதிகளவில் சென்று வருகிறது.

இதற்கிடையே கோவையை அடுத்த குறிச்சி அருகே உள்ள சமவெளி பகுதியில் அரிய வகை வெள்ளை நாகம் ஒன்று படம் எடுத்தபடி நின்றது.

இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், அந்த பாம்பை சென்று பார்த்தனர். உடனே வனத்துறையினர், சமூக ஆர்வலர்களுடன் சேர்ந்து அந்த பாம்பை பிடித்து மாங்கரை வனப்பகுதியில் விடுவித்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வெள்ளை நாகம் என்று தனியாக இல்லை. மரபணு குறைபாடு காரணமாக இந்த பாம்பு வெள்ளை நிறத்தில் இருக்கிறது. அது 2 அடி நீளத்தில் இருந்தது. மரபணு குறைபாடு காரணமாக இருப்பதால் அந்த பாம்பு மிகவும் ஆக்ரோஷமாக இருந்தது. எனவே அதை வனப்பகுதியில் விட்டுவிட்டோம் என்றனர்.

1 More update

Next Story