வீட்டுக்குள் புகுந்த சாரைப்பாம்பு


வீட்டுக்குள் புகுந்த சாரைப்பாம்பு
x
தினத்தந்தி 10 May 2023 12:15 AM IST (Updated: 10 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே வீட்டுக்குள் புகுந்த சாரைப்பாம்பு பிடிபட்டது.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஒட்டப்பிடாரம் அருகே உள்ள எ.கே.எஸ் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் திடீரென சத்தம் கேட்டுள்ளது. அப்போது வீட்டில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்த்த போது அந்த இடத்தில் 5 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் ஒட்டப்பிடாரத்தில் உள்ள தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஓட்டப்பிடாரம் தீயணைப்பு அலுவலர் சுப்பையா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று 5 அடி நீளமுள்ள சாரை பாம்பை பிடித்து சாலிகுளம் வனப்பகுதியில் விட்டனர்.


Next Story