பழுது நீக்கிய மலைரெயில் டீசல் என்ஜின் வந்தது
பழுது நீக்கிய மலைரெயில் டீசல் என்ஜின் வந்தது
கோயம்புத்தூர்
மேட்டுப்பாளையம்
குன்னூர்-ஊட்டி இடையே இயங்கும் மலைரெயில் டீசல் என்ஜின் பழுது நீக்கும் பணிக்காக திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பணி முடிவடைந்த பிறகு திருச்சியில் இருந்து பி.ஆர்.என்.ஏ. வேகன் மூலம் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த என்ஜினை, அங்குள்ள யார்டில் இறக்கி வைக்க ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து 140 டன் எடை கொண்ட ராஜாளி கிரேன் வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து ஈரோடு ரெயில் பெட்டிகள் பணிமனை அலுவலர் ஏமெய் பண்ட்கர், முதன்மை பிரிவு பொறியாளர் சதீஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் இர்ஷாத் அகமது கிரேனை இயக்க 20-க்கும் மேற்பட்ட ரெயில்வே தொழிலாளர்கள் முதலில் ரெயில் சக்கரங்களுடன் கூடிய டீசல் என்ஜினை பத்திரமாக யார்டில் இறக்கி வைத்தனர்.
Related Tags :
Next Story