பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளரை நிறுத்த வேண்டுகோள்


பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளரை நிறுத்த வேண்டுகோள்
x

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளரை நிறுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

பெரம்பலூர்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மேற்கு மாவட்டம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் நியமன கலந்துரையாடல் கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் பெரம்பலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ரத்தினவேல் தலைமை தாங்கினார். தேர்தல் வாக்குச்சாவடி முகவர்கள் பணிகள் குறித்து கட்சியின் துணை பொதுச்செயலாளர் கனியமுதன், மண்டல செயலாளர் தமிழாதன் உள்ளிட்டோர் கருத்துரைகள் வழங்கினர். கூட்டத்தில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியினை இந்தியா கூட்டணியிடம் கேட்டு பெற்று தலித் வேட்பாளரை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக தேர்தலில் நிறுத்த வேண்டும். திருமாவளவனின் 60 வயது நிறைவு மணிவிழா, வெல்லும் ஜனநாயகம் மாநாட்டு விளக்க பொதுக்கூட்டம், மாற்று சமூகத்தினரை கட்சியில் இணைக்கும் விழா என முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தினை திருமாவளவனின் தலைமையில் வருகிற நவம்பர் மாதம் இறுதியில் பெரம்பலூர் நகரில் நடத்தப்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் சாதி மற்றும் மதத்தின் பெயரால் இயங்கி வரும் வணிக நிறுவனங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story