காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் உபகரணங்களுடன் மீட்புகுழு தயார்


காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் உபகரணங்களுடன் மீட்புகுழு தயார்
x

கனமழை முன்னெச்சரிக்கையாக காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் உபகரணங்களுடன் மீட்புகுழு தயார் நிலையில் உள்ளது.

கடலூர்

காட்டுமன்னார்கோவில்,

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆறுகள், வாய்க்கால்கள், ஓடைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆங்காங்கே தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக காட்டுமன்னார்கோவில் பகுதி மழை வெள்ளத்தால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால், அதில் பாதிக்கப்படும் மக்களை காப்பாற்ற காட்டுமன்னார்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா தலைமையில் தனிப்பிரிவு ஏட்டு ராஜா, குற்றப்பிரிவு ஏட்டு முத்து ஏட்டுகள் நல்லதம்பி, சந்தோஷ் உள்ளிட்ட குழுவினர் மீட்பு உபகரணங்களுடன் போலீஸ் நிலையத்தில் தயார் நிலையில் உள்ளனர். எனவே காட்டுமன்னார்கோவில் பகுதி மக்கள் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டால் மீட்பு பணிக்காக காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளளலாம் என காட்டுமன்னார்கோவில் போலீசார் தெரிவித்தனர்.


Next Story