இந்தியா முழுவதும் சைக்கிளில் வலம் வரும் வடமாநில காதல் தம்பதி


இந்தியா முழுவதும் சைக்கிளில் வலம் வரும் வடமாநில காதல் தம்பதி
x
தினத்தந்தி 17 Jun 2023 12:15 AM IST (Updated: 17 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உலக அமைதிக்காக இந்தியா முழுவதும் சைக்கிளில் வடமாநில காதல் தம்பதி வலம் வருகிறார்கள்.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரோகித். அவரது மனைவி அஞ்சலி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் தங்கள் சொந்த ஊரில் புதிதாக கட்டப்பட்டு வரும் கோவிலுக்கு நன்கொடை கேட்டும் மற்றும் உலக அமைதிக்காகவும் மகிழ்ச்சியுடன் அனைத்து பகுதிகளையும் சைக்கிளில் சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஒரு ஆர்வத்திலும் கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் சைக்கிள் ஓட்டியபடி புறப்பட்டுள்ளனர். மராட்டியம், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்கள் சென்று சுற்றி பார்த்துவிட்டு தமிழகத்தில் கோவை வந்துள்ளனர். கோவையில் இருந்து தென்காசி, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி சென்று விட்டு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி, ராமநாதபுரம் வழியாக நேற்று இரவு ராமேசுவரம் வந்து சேர்ந்தனர்.

இது பற்றி ரோகித்-அஞ்சலி தம்பதி கூறியதாவது:-

மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் இருந்து எங்கள் சைக்கிள் பயணத்தை தொடங்கினோம். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சைக்கிள் ஓட்டியப்படியே செல்ல திட்டமிட்டுள்ளோம். லடாக்கில் எங்கள் பயணத்தை முடிக்க உள்ளோம். ராமேசுவரம், தனுஷ்கோடி வரை சென்று விட்டு மீண்டும் தஞ்சாவூர், புதுச்சேரி வழியாக தெலுங்கானா ஆந்திரா சென்று விட்டு இன்னும் பல மாநிலங்கள் செல்ல உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story