ஜெயங்கொண்டம் மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
ஜெயங்கொண்டம் மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையத்தை சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் இளந்தமிழன்(வயது25). இவரும் ஜெயங்கொண்டம் தனியார் கல்லூரியில் படித்து வரும் மகேஸ்வரி(20) என்பவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின் காதலுக்கு இருவீட்டார் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் காதலர்கள் இருவரும் உடையார்பாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இன்ஸ்பெக்டர் சுமதி புதுமணத் தம்பதிகளிடம் விசாரணை செய்து இரு தரப்பு பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்தார். காவல் நிலையம் வந்த பெண்ணின் பெற்றோர்கள் மகேஸ்வரியை அழைத்துள்ளனர்.
அவர் வரமறுத்து இளந்தமிழனோடுதான் செல்வேன் என்று கூறியுள்ளார். இதனால் பெண்ணின் பெற்றோர்கள் திரும்பி சென்று விட்டனர். இதையடுத்து இளந்தமிழனின் பெற்றோர்களை அழைத்து அவர்களுக்கு அறிவுரைகள் கூறி அவர்களோடு அனுப்பி வைத்தனர்.