காதலர் தினத்தை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பல மடங்கு உயர்ந்த ரோஜா


காதலர் தினத்தை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பல மடங்கு உயர்ந்த ரோஜா
x

காதலர் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் ரோஜா பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

கன்னியாகுமரி,

காதலர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை பூச்சந்தையில் ரோஜா பூக்களின் விற்பனை களைகட்டி உள்ளது.

இதற்காக பெங்களூர், ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விதவிதமான ரோஜாப்பூக்கள் குவிந்துள்ளன. வழக்கமாக ஒரு கட்டுக்கு ரோஜா பூ, 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், தற்போது 600 ரூபாயாக உயர்ந்துள்ளது.

1 More update

Next Story