ரெயில் முன்பாய்ந்து சலூன் கடைக்காரர் தற்கொலை


ரெயில் முன்பாய்ந்து சலூன் கடைக்காரர் தற்கொலை
x
தினத்தந்தி 9 Feb 2023 12:30 AM IST (Updated: 9 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

பழனியில் ரெயில் முன்பாய்ந்து சலூன் கடைக்காரர் தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல்

பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 59). இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி. இவர் அடிவாரத்தில் சலூன் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. அதில் குணமாகாததால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பழனி சேரன் ஜீவா நகர் பகுதியில் மதுரை-திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தங்கவேல் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த பழனி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story