ஆடு மேய்த்த பள்ளி மாணவன் மின்சாரம் பாய்ந்து பலி


ஆடு மேய்த்த பள்ளி மாணவன் மின்சாரம் பாய்ந்து பலி
x

ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பள்ளி மாணவன் தாழ்வாக இருந்த உயர் அழுத்த மின்கம்பி அருகே சென்றபோது மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக இறந்தான்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பள்ளி மாணவன் தாழ்வாக இருந்த உயர் அழுத்த மின்கம்பி அருகே சென்றபோது மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக இறந்தான்.

பள்ளி மாணவன்

ஆரணியை அடுத்த நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமுண்டீஸ்வரி. இவரது கணவர் இளங்கோ இறந்து விட்டார். இவர்களுக்கு தினேஷ் குமார் (வயது 13), ராஜேஷ் குமார் என்ற 2 மகன்கள். இதில் தினேஷ்குமார் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

இளங்கோ இறந்தபின் சாமுண்டீஸ்வரி ஆடு மேய்த்துக்கொண்டு பிள்ளைகளை கவனித்து வந்தார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் தினேஷ் குமார் நேற்று மாலை வீட்டின் அருகாமையில் உள்ள பார்வதி அகரம் பகுதியில் சின்னப் பையன் என்பவருடைய நிலத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான். அந்த பகுதியில் துணை மின் நிலையத்துக்கு செல்லும் உயர்அழுத்த மின்கம்பி தாழ்வாக உள்ளது.

தூக்கி வீசப்பட்டான்

அங்கு சென்றபோது உயர்அழுத்த மின்கம்பி உரசியதாக தெரிகிறது. அடுத்த வினாடியே தினேஷ் குமார் மீது மின்சாரம் பாய்ந்ததில் கழுத்து, இடுப்பு பகுதியில் தீக்காயங்களோடு தூக்கி வீசப்பட்டான்.

தகவல் அறிந்த தாயார் பதற்றத்துடன் அங்கு சென்றபோது தினேஷ் குமார் இறந்து கிடந்ததை பார்த்து கதறி அழுதார். இது குறித்து அவர் களம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் களம்பூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சத்யா வழக்குப்பதிவு செய்து தினேஷ் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இது குறித்து அவர் விசாரணை நடத்தி வருகின்றார்.


Next Story