பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கிய பள்ளி வேன்
திண்டிவனத்தில் பாதாள சாக்கடை பள்ளத்தில் பள்ளி வேன் சிக்கியது.
விழுப்புரம்
திண்டிவனம்
திண்டிவனம் பெலாகுப்பம் சாலையில் அவரப்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சரியாக மூடாததால் நேற்று அந்த வழியாக வந்த பள்ளி வேன் பள்ளத்தில் சிக்கியது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் ஓடி வந்து வேனில் இருந்த மாணவ-மாணவிகளை கீழே இறக்கிவிட்டனர். சிலநிமிட போராட்டத்துக்கு பின்னர் பள்ளத்தில் சிக்கியவேனை மீ்ட்டு மாணவ-மாணவிகளை ஏற்றி அனுப்பி வைத்தனர்.
பாதாள சாக்கடை பள்ளத்தில் அந்த வழியாக பள்ளிக்கு நடந்தும், சைக்கிள்களிலும் சென்று வரும் மாணவ-மாணவிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் பாதாளசாக்கடை பள்ளத்தில் தவறி விழும் சம்பவம் அவ்வப்போது நிகழ்ந்து வருவதாகவும் எனவே பெரியஅளவிலான அசம்பாவிதங்கள் நிகழ்வதற்கு முன்னதாக பாதாளசாக்கடை பள்ளத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story