வாலிபருக்கு அரிவாள் வெட்டு


வாலிபருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 4 July 2023 12:15 AM IST (Updated: 4 July 2023 3:51 PM IST)
t-max-icont-min-icon

வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

சிவகங்கை

சிவகங்கை,

சிவகங்கை காமராஜர் காலனி பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டி(வயது 32). வெளிநாட்டில் வேலை பார்த்து சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு தங்கப்பாண்டி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீட்டுக்கு வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.

நேற்று அதிகாலையில் அந்த பகுதியில் ஒரு இடத்தில் பலத்த அரிவாள் வெட்டு காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தங்கப்பாண்டி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதை தொடர்ந்து அவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story