வாலிபருக்கு அரிவாள் வெட்டு


வாலிபருக்கு அரிவாள் வெட்டு
x

கல்லிடைக்குறிச்சியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

திருநெல்வேலி

அம்பை:

கல்லிடைக்குறிச்சி ஆத்தியடித் தெருவைச் சேர்ந்தவர் பழனி (வயது 55). விவசாயியான இவர் நேற்று முன்தினம் தெருவின் அருகே உள்ள கோவிலில் அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த அதே தெருவைச் சேர்ந்த முத்து மகன் மாசானம் (21), அவரது மைத்துனர் கோவில்குளம் சங்கர் (35) ஆகியோர் பழனியிடம் தகராறு செய்தனர்.

இதை அறிந்த பழனியின் மகன் சந்தானம் (25) என்பவர் தந்தையிடம் தகராறு செய்தவர்களிடம் சென்று தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாசானம், சங்கர் ஆகியோர் அரிவாளால் சந்தானத்தை வெட்டிவிட்டு அருகில் இருந்த வாறுகாலில் தள்ளி விட்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஸ்குமார், கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story