வாலிபருக்கு அரிவாள் வெட்டு


வாலிபருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 19 March 2023 6:45 PM GMT (Updated: 2023-03-20T00:16:17+05:30)

திருமருகலில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் சந்தைப்பேட்டை கடைத்தெருவில் குருவாடி மெயின் ரோட்டை சேர்ந்த அறிவழகன் (வயது 52) என்பவர் மெடிக்கல் நடத்தி வருகிறார்.இந்த கடைக்கு வந்த ஆதீனங்குடி, பள்ளிக்கூடத்தெருவை சேர்ந்த சேகர் மகன் சங்கர் (வயது24) சில நாட்களுக்கு முன்பு தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என மருந்து மற்றும் மாத்திரை வாங்கிச் சென்றதாகவும், அதை சாப்பிட்டும் தந்தைக்கு குணமாகவில்லை எனக் கூறி அறிவழகனிடம் வாக்குவாதம் செய்து, தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த அறிவழகனின் மகன் அபினேஷ் (25), சங்கர் மீது கடையில் இருந்த அரிவாளை எடுத்து, வீசியதில் அவருக்கு இடது பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.உடன் அக்கம் பக்கத்தினர் சங்கரை மீட்டு திருமருகல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அபினேசை கைது செய்தனர்.


Next Story