ஒருவருக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது
மானூர் அருகே ஒருவரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி
மானூர்:
மானூர் அருகே உள்ள சுப்பையாபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 37). இவர் அழகியபாண்டியபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் வாங்கிக்கொண்டு வெளியே வந்தார். அப்போது ஏற்கனவே அங்கு மோட்டார் சைக்கிளில் வந்திருந்த அழகியபாண்டியபுரத்தைச் சேர்ந்த மதியழகன் மகன் முத்துசெல்வம் (28) மதுபோதையில் அவதூறாக பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதனை சரவணன் தட்டிக்கேட்கவே, ஆத்திரமடைந்த முத்துசெல்வம் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த அரிவாளை எடுத்து சரவணனை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் சரவணனுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முத்துசெல்வத்தை கைது செய்தனர்.
Related Tags :
Next Story