கும்பாபிஷேகத்தையொட்டி கோவிலுக்குள் பக்தர்கள் வந்து செல்ல தனிப்பாதை


கும்பாபிஷேகத்தையொட்டி கோவிலுக்குள் பக்தர்கள் வந்து செல்ல தனிப்பாதை
x

கும்பாபிஷேகத்தையொட்டி கோவிலுக்குள் பக்தர்கள் வந்து செல்ல தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருப்பதால், இரவு நேரத்தில் கோவில் மின்னொளியில் ஜொலித்து வருகிறது. கோவிலுக்குள் பக்தர்கள் எளிதாக வந்து செல்வதற்கு வசதியாக போலீசாரால் இரும்பு தடுப்புகளை கொண்டு தனி பாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவிலை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழா பாதுகாப்பு பணிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சிறுவாச்சூர், போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணி முதல் மதியம் 2 மணி வரை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக போலீசாரால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


Next Story