பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் உலா வரும் ஒற்றை யானை


பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் உலா வரும் ஒற்றை யானை
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் ஒற்றை யானை உலா வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு, வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் ஒற்றை யானை உலா வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு, வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

யானை நடமாட்டம்

பொள்ளாச்சி வனச்சரகம் ஆழியாறு பகுதியில் கடந்த சில மாதங்களாக ஒற்றை காட்டு யானை சுற்றித்திரிந்து வருகிறது. இந்த யானை ஆழியாறு வண்ணத்துப்பூச்சி பூங்கா, அணை உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு இருந்தது. பின்னர் வனப்பகுதியில் சென்ற யானை மீண்டும் தற்போது ஆழியாறு பகுதிகளில் சுற்றி திரிந்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன் தோட்டங்களுக்குள் புகுந்து யானை சேதப்படுத்தியது. இந்த நிலையில் தற்போது குரங்கு நீர்வீழ்ச்சி, சின்னாறு பகுதிகளில் சுற்றி திரிந்து வருகிறது. வனச்சரகர் புகழேந்தி தலைமையில் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கவனமாக செல்ல வேண்டும்

ஆழியாறு, குரங்கு நீர்வீழ்ச்சி பகுதிகளில் ஒரு காட்டு யானை சுற்றி திரிந்து வருகிறது. பொள்ளாச்சி-வால்பாறை சாலையை கடந்து ஆழியாறு அணைக்கு தண்ணீர் குடிக்க வருகிறது. எனவே வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். யானை நிற்பதை பார்த்தால் தொந்தரவு செய்ய கூடாது. அருகில் சென்று செல்போனில் புகைப்படம் எடுப்பது, சத்தம் போடுவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். மேலும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதன் நடமாட்டத்தை குழு அமைத்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story