தும்பிக்கையால் ஒரேயொரு போடு: சல்லி சல்லியாக நொறுங்கிய பஸ் கண்ணாடி..!


தும்பிக்கையால் ஒரேயொரு போடு: சல்லி சல்லியாக நொறுங்கிய பஸ் கண்ணாடி..!
x

காரப்பள்ளம் பகுதியில் பேருந்தை வழிமறித்த யானை, தும்பிக்கையால் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு,

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்த நிலையில், ஆசனூர் அருகே தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனை சாவடியில் இருந்து புளிஞ்சூர் செல்லும் சாலையில் இரு யானைகள் உலா வந்தது. அப்போது அந்த வழியாக அரசு பேருந்து ஒன்று வந்துள்ளது. யானைகளை பார்த்த உடன் ஓட்டுநர், பேருந்தை நிறுத்தினார். பேருந்துக்கு வழி விடாமல், சாலையிலேயே இரு யானைகளும், சிறிது நேரம் நின்றது.

அப்போது ஒரு யானை மெதுவாக நடந்து பேருந்தின் முன் பகுதிக்கு வந்து, தும்பிக்கையால் மோதி, பேருந்தின் கண்ணாடியை உடைத்தது. இதனால் பயணிகள் அச்சமடைந்தனர். கண்ணாடி உடைந்த சத்தம் கேட்ட யானை பின்னோக்கி சென்று சாலையை விட்டு காட்டு பகுதிக்கு சென்றது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story