தந்தையை கட்டையால் அடித்துக்கொன்ற விசைத்தறி தொழிலாளி கைது


தந்தையை கட்டையால் அடித்துக்கொன்ற விசைத்தறி தொழிலாளி கைது
x

தந்தையை கட்டையால் அடித்துக்கொன்ற விசைத்தறி தொழிலாளி கைது

திருப்பூர்

ஊத்துக்குளி

ஊத்துக்குளி அருகே வீட்டை காலி செய்து விட்டு வெளியேற சொன்ன தந்தையை ஆத்திரத்தில் கட்டையால் அடித்து கொலை செய்த விசைத்தறி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தந்தை -மகன்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள செங்கப்பள்ளி ஊராட்சி புங்கம்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 80). இவர் அப்பகுதியில் இளநீர் விற்பனை செய்து வந்தார். இவரது மகன் மனோகரன் (40). விசைத்தறி தொழிலாளி. இவருடைய மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் தந்தையும், மகனும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். மனோகரன் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். இதனால் அவருடைய தந்தை அவரை கண்டித்தார். மேலும் வீட்டை விட்டு வெளியே செல்லுமாறும் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்றும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மனோகரன் அருகில் இருந்த தறிக்கட்டையால் ஈஸ்வரனின் தலையில் பலமாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதில் பலத்த காயம் அடைந்த ஈஸ்வரன் ரத்த வௌ்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனே அருகில் உள்ளவர்கள் ஈஸ்வரனை மீட்டு ஊத்துக்குளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

கொலை

திருப்பூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஈஸ்வரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மனோகரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தந்தையை தறி கட்டையால் அடித்து மகனே கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-


Next Story