பொன்னேரியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் முத்திரைத்தாள் குறைவு கட்டணம் ரூ.84 லட்சம் வசூல்


பொன்னேரியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் முத்திரைத்தாள் குறைவு கட்டணம் ரூ.84 லட்சம் வசூல்
x

பொன்னேரியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் முத்திரைத்தாள் குறைவு கட்டணம் ரூ.84 லட்சம் வசூல் செய்யப்பட்டு பத்திரங்கள் உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டது.

திருவள்ளூர்

பொன்னேரியில் தமிழ்நாடு அரசின் பத்திர பதிவுத்துறை சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களில் உள்ள தனியாருக்கு சொந்தமான பல்வேறு சொத்துக்கள் வாங்குதல், விற்பனை செய்தல் போன்ற பணிகள் மூலம் முத்திரைத்தாள் வழியாக பத்திர ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

கடந்த காலங்களில் அரசின் நில மதிப்பிற்கு குறைவாக முத்திரைத்தாள் பெற்று பத்திரங்கள் பதிவு செய்து நிலுவையில் உள்ள அரசுக்கு வர வேண்டிய வருவாயை ஈட்ட முத்திரைத்தாள் குறைவு கட்டணம் வசூல் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதன் பேரில் பத்திரப்பதிவுத்துறை சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் சாரதா ருக்மணி தலைமை தாங்கினார். முத்திரைத்தாள் சிறப்பு தாசில்தார் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். பொன்னேரி பத்திரப்பதிவு சார் பதிவாளர் பாலமுருகன் அனைவரையும் வரவேற்றார்.

முகாமில் பத்திரப்பதிவுத்துறை துணைத் தலைவர் சேகர் பங்கேற்று முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் பத்திர பதிவு செய்து முத்திரைத்தாள் குறைவு கட்டணம் செலுத்தி பதிவு செய்த 251 நில உரிமையாளரிடம் இருந்து நிலுவையை வட்டியுடன் சேர்த்து ரூ.84 லட்சத்து 16 ஆயிரம் வசூல் செய்யப்பட்டு பத்திரங்கள் உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டது.


Next Story