மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம்


மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம்
x

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலத்தில் இன்று முதல் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட நிர்வாகம் மூலம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கி நடைபெற்றது.

இதில் அடையாள அட்டை பெற மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் அவர்களின் பராமரிப்பாளர்களுடன் வந்தனர்.

இதனால் மாற்றுத்தினாளிகள் நல அலுவலகம் முன்பு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இந்த முகாமியில் பல்வேறு வகையான மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை புதிதாக பெறுவதற்கும், புதுப்பித்துக் கொள்ளவும் நேரடியாக விண்ணப்பித்தனர்.

அப்போது சிறப்பு மருத்துவர்கள் மூலம் அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

மாற்றுத் திறனாளிகள் அமர்வதற்கு போதிய இட வசதி இல்லாததால் அவர்கள் மிகவும் அவதி அடைந்தனர்.


Next Story