1 நிமிடம் 23 நொடிகளில் 210 டியூப் லைட்டுகளை உடலில் உடைத்து சாதனை படைத்த மாணவி
1 நிமிடம் 23 நொடிகளில் 210 டியூப் லைட்டுகளை உடலில் உடைத்து சாதனை படைத்த மாணவி
பொள்ளாச்சி
பொள்ளாச்சியை சேர்ந்த கவுரிசங்கர்-ரம்யா தம்பதியரின் மகள் ஆதன்யா (வயது12). இவர் பொள்ளாச்சி அருகே உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 9 ஆண்டுகளாக கராத்தே பயிற்சி பெற்று வரும் மாணவி ஆதன்யா கராத்தே போட்டியில் பிளாக் பெல்ட் பெற்றுள்ளார். ஆனாலும் மாணவி ஆதன்யா 2 நிமிடங்களில் தனதுஉடலில் அதிக டியூப் லைட்டுகளை உடைத்து சாதனை செய்ய திட்டமிட்டார். அதன்படி இதற்கு கடந்த ஒரு ஆண்டுகளாக தீவிர பயிற்சி மேற்கொண்டார். நேற்று அந்தப் பள்ளியில் வோ்ல்ட்ரெக்கார்டு உலக சாதனைப் படைக்க டியூப் லைட் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவி ஆதன்யா தனது உடலில் அதிக டியூப் லைட்களை உடைத்து சாதனை படைத்தார். 1 நிமிடம் 23 நொடிகளில் 210 டியூப் லைட்டுகளை 2 கராத்தே வீரர்கள் உடைக்க மாணவி ஆதன்யா கம்பீரமாக நின்று உலக சாதனை படைத்தார். சாதனை படைத்த மாணவி ஆதன்யாவை பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் பாராட்டினார்கள். பின்னர் உலகசாதனை படைத்த மாணவி ஆதன்யாவிற்கு நோபல் வோ்ல்ட்ரெக்கார்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.