வாலிபரின் கழுத்தை அறுத்துக்கொன்ற 10-ம் வகுப்பு மாணவன்


வாலிபரின் கழுத்தை அறுத்துக்கொன்ற 10-ம் வகுப்பு மாணவன்
x

வாலிபரின் கழுத்தை அறுத்துக்கொன்ற 10-ம் வகுப்பு மாணவன் திருப்பூர் கோர்ட்டில் சரண் அடைந்தான்.

திருப்பூர்

அவினாசி,வாலிபரின் கழுத்தை அறுத்துக்கொன்ற 10-ம் வகுப்பு மாணவன்வாலிபரின் கழுத்தை அறுத்துக்கொன்ற 10-ம் வகுப்பு மாணவன்

அவினாசியில் வாலிபரின் கழுத்தை அறுத்துக்கொன்ற 10-ம் வகுப்பு மாணவன் திருப்பூர் கோர்ட்டில் சரண் அடைந்தான்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வாலிபர் படுகொலை

திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த சீனிவாசன் மகன் யுவராஜ் (வயது 32). இவர் திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த வேலாயுதம்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் தனியாக குடியிருந்து குடிநீர் கேன் வினியோகம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் இவர் சம்பத்தன்று கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு வீட்டில் பிணமாக கிடந்தார். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் அந்தபகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் யுவராஜ் குடியிருக்கும் வீட்டிற்கு யாராவது வந்தார்களா? என்று ஆய்வு செய்தனர். மேலும் அக்கம் பக்கத்திலும் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த கொலை தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் இந்த கொலை ெதாடர்பாக 16 வயது நிரம்பிய 10-ம் வகுப்பு மாணவன் தென்காசி கோர்ட்டில் சரண் அடைய சென்றுள்ளான். அப்போது அங்குள்ள போலீசார் கொலை நடந்த இடம் அவினாசி என்பதால் அந்த மாவட்டத்தில் உள்ள கோர்ட்டில் சரண் அடையுமாறு கூறியுள்ளனர்.

கோர்ட்டில் சரண்

இதையடுத்து அந்த மாணவன் திருப்பூர் கோர்ட்டில் சரண் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். உடனே திருப்பூர் போலீசார் அவினாசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அந்த மாணவனை அழைத்து சென்று கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள். முன் விரோதமா? அல்லது கொடுக்கல் வாங்கலா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்று விசாரித்து வருகிறார்கள். தென்காசியை சேர்ந்த அந்த மாணவன் தனது பெற்றோருடன் அவினாசியில் பகுதியில் குடியிருந்து அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

-----------


Next Story