ராமையன்பட்டி குப்பைக்கிடங்கில் திடீர் தீ


ராமையன்பட்டி குப்பைக்கிடங்கில் திடீர் தீ
x

ராமையன்பட்டி குப்பைக்கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை அருகே ராமையன்பட்டியில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் நேற்று இரவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனே மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் தலைமையில் 6 தீயணைப்பு வாகனங்களில் வந்து வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, சுகாதார அலுவலர் சாகுல் அமீது, சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

அம்பை பெரியகுளம் பகுதியில் உள்ள வயல் பகுதியில் நேற்று மாலையில் திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்று பலமாக வீசியதால், அம்பை-முக்கூடல் சாலையில் எழில்நகர் குடியிருப்பு பகுதியின் பின்புறம் உள்ள புதர்களிலும் தீ மளமளவென பரவியது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அம்பை ஜாமியா பள்ளிவாசல் தெருவைச் சார்ந்த அகமது கபீர் என்பவர் வீட்டின் முன் நிறுத்தப்பட்டு இருந்த ஆட்டோ அதிகாலை 3 மணியளவில் திடீரென்று தீப்பிடித்து எரிந்து சேதம் அடைந்தது. இந்த சம்பவங்கள் குறித்து அம்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story