வங்கியில் திடீர் தீவிபத்து


வங்கியில் திடீர் தீவிபத்து
x

அம்பையில் வங்கியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை மெயின் ரோட்டில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் வங்கியில் உள்ள பேட்டரி அருகில் மின்கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து வங்கி ஊழியர்கள் அம்பை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து, மின்சார இணைப்பை துண்டித்தனர். இதனால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. மேலும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்ததால் வங்கி லாக்கரில் உள்ள பணம், நகைகள், முக்கிய ஆவணங்கள் தப்பியது. இதனால் இந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.


Next Story