சாத்தூரில் சாலையில் திடீர் பள்ளம்


சாத்தூரில் சாலையில் திடீர் பள்ளம்
x

சாத்தூரில் சாலையில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளத்தினால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூரில் சாலையில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளத்தினால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

பாதாள சாக்கடை திட்டம்

சாத்தூரில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிவடையும் தருவாயில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் சாத்தூர் மெயின் சாலைகள் எங்கு பார்த்தாலும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக மெயின் சாலைகளில் மண் இறங்கி பள்ளமாக காணப்படுகிறது. 5-க்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளங்களில் மண் இறங்கி பல்வேறு இடங்களில் சாலையின் ஓரங்களிலும், நடுவிலும் என பெரிய, பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.

விபத்து ஏற்படும் அபாயம்

திடீரென ஏற்பட்ட பள்ளங்களினால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள இந்த பள்ளங்களினால் சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் இருசக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Next Story