மின் ஒயர் உரசியதில் கரும்பு வெட்டும் எந்திரம் எரிந்து நாசம்


மின் ஒயர் உரசியதில் கரும்பு வெட்டும் எந்திரம் எரிந்து நாசம்
x

அரக்கோணம் அருகேமின் ஒயர் உரசியதில் கரும்பு வெட்டும் எந்திரம் எரிந்து நாசமானது. ஒரு ஏக்கர் கரும்பும் கருகியது.

ராணிப்பேட்டை

அரக்கோணத்தை அடுத்த சித்தேரி வட களத்தூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 57). இவர் தனது விவசாய நிலத்தில் சுமார் 10 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்திருந்தார். இந்தநிலையில் நேற்று கரும்பு வெட்டுவதற்காக அரக்கோணம் வாணியம்பேட்டை பகுதியை சேர்ந்த கோபிநாத் என்பவரது கரும்பு வெட்டும் எந்திரம் மூலம் கரும்ரு வெட்டப்பட்டது. கும்பகோணம் பகுதியை சேர்ந்த டிரைவர் நெல்சன் (32). என்பவர் கரும்பு வெட்டிக் கொண்டிருந்தபோது, கரும்பு வெட்டும் எந்திரத்தின் உயராமான முன் பகுதி விவசாய நிலத்திற்கு செல்லும் மின் ஒயரில் உரசியது. இதில் மின் கசிவு ஏற்பட்டு சுமார் ரூ.1 கோடி மதிப்பு கரும்பு வெட்டும் என்திரம் தீ பிடித்து முற்றிலும் எரிந்து நாசமானது.

இது குறித்து அரக்கோணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே அரக்கோணம் அடுத்த கைனூர் பகுதியில் கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கான பணியில் இருந்த சோளிங்கர் தீயணைப்பு வீரர்கள் வந்தனர். அப்போது அரக்கோணம் தீயணைப்பு வீரர்களும் வந்தனர். இருவரும் சேர்ந்து தீயை அனைத்தனர்.

இதில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பிலான கரும்பு பயிரும் கருகியது. டிரைவர் நெல்சன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story