மின்கம்பத்துடன் சேர்த்து போடப்பட்ட தார்சாலை
உதயேந்திரம் பேரூராட்சியில் மின்கம்பத்துடன் சேர்த்து போடப்பட்ட தார்சாலை குறித்து பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
திருப்பத்தூர்
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உதயேந்திரம் பேரூராட்சியில் 14-வது வார்டு மும்தாஜ் கார்டன் பகுதியில் சாலைகள் மிகவும் சேதம் அடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் பேரூராட்சி தலைவர் பூசாராணியிடம் மனு அளித்தனர்.
அதன்பேரில் மூலதன மானியத்திட்டத்தின் கீழ் சுமார் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் ஒப்பந்ததாரர் மூலம் தார் சாலை அமைக்கும் பணியை தொடங்கப்பட்டது.
அப்போது சாலையின் நடுவே இருந்த மின்கம்பத்தை அகற்றாமல் மின்கம்பத்துடன் சேர்த்து தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளதாகவும் விபத்து ஏற்படுவதாகவும், ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர்.
Related Tags :
Next Story