தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

நாகப்பட்டினம்

நாகூர்:

நாகை மாவட்டம் நாகூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் முகமது அலி. இவரது மகன் நிஜாருதீன் (வயது22). இவர் நாகூர் கடற்கரையில் குதிரை ஓட்டி வந்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு வீட்டுக்கு வந்த நிஜாருதீன், தனது தாய்க்கு செல்போனில் எனக்கு மனசு சரியில்லை என்றும், நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்றும் கூறிவிட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த நிஜாருதீன் தாய் வீட்டில் வந்து பார்த்த போது அவர் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு கொண்டார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் நிஜாருதீனை மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story