ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
ராமநாதபுரம் அருகே ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ளது கருக்காத்தி. இந்த ஊரைச் சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் குமரேசன் (வயது 32). இவருக்கு திருமணமாகி சிவபாலா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் இருந்த நிலையில் மனைவி கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டாராம். இதனால் மனம் உடைந்து காணப்பட்ட குமரேசன் கோவையில் உள்ள ஜூஸ் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் ராமநாதபுரம் அருகே நேற்று முன்தினம் மைத்துனர் வீட்டிற்கு வந்த அவர் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றநிலையில் மாயமானார். அவரை காணவில்லை என்று தேடி வந்தனர். இந்நிலையில் ராமநாதபுரம் அச்சுந்தன்வயல் லாந்தை ரெயில்வே தண்டவாள பகுதியில் நேற்று காலை சென்னையில் இருந்து ராமநாதபுரம் வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் துரை, மயில்முருகன் ஆகியோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.