போலீசாரை மிரட்ட பிளேடால் கையை அறுத்துக் கொண்ட வாலிபர்


போலீசாரை மிரட்ட பிளேடால் கையை அறுத்துக் கொண்ட வாலிபர்
x

லாரி டிரைவரிடம் பணம்பறிக்க முயன்று சிக்கிய வாலிபர் சிறைக்கு செல்ல பயந்து போலீசாரை மிரட்ட பிளேடால் கையை அறுத்துக் கொண்டார். அவரை போலீசார் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

லாரி டிரைவரிடம் பணம்பறிக்க முயன்று சிக்கிய வாலிபர் சிறைக்கு செல்ல பயந்து போலீசாரை மிரட்ட பிளேடால் கையை அறுத்துக் கொண்டார். அவரை போலீசார் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பரபரப்பான இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:-

டிரைவரை மிரட்டி பணம்பறிப்பு

பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 35). லாரி டிரைவரான இவர் பெங்களூரு பகுதியில் இருந்து லாரியில் சரக்கு ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை வந்தடைந்த போது ஓய்வெடுப்பதற்காக பைபாஸ் சாலையில் லாரியை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு லாரியிலேயே மஞ்சுநாத் தூங்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அங்கு வந்த வாணியம்பாடி - சென்னாம்பேட்டை பகுதியை சேர்ந்த நவீத் (29), என்ற இளைஞர் லாரி டிரைவரான மஞ்சுநாத்தை மிரட்டி பணம் பறிக்க முயற்சித்துள்ளார்.

புகார்

இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் மஞ்சுநாத் வாணியம்பாடி நகர போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீத்தை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் நவீத் மீது ஏற்கனவே ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், ஏலகிரி, ஆம்பூர், வாணியம்பாடி உட்பட பல்வேறு பகுதிகளில் 35-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து நவீத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்க கொண்டு சென்றனர். அப்போது போலீசாரை மிரட்ட தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் நவீத்் தன் கையை அறுத்துக் கொண்டு கத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சிறையில் அடைப்பு

தொடர்ந்து அவரை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போலீசார் அவருக்கு முதலுதவி சிகிச்சை வழங்கினர். பெரிய பாதிப்பு இல்லை என டாக்டர்கள் கூறியதை தொடர்ந்து அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story