மாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி


மாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
x
தினத்தந்தி 29 Sep 2023 9:16 AM GMT (Updated: 29 Sep 2023 9:35 AM GMT)

மாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் வடக்கு மாமல்லபுரம் அண்ணல் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் அருள். இவரது மகன் கார்த்திகேயன் (வயது 24). இவர் மாமல்லபுரம் ஒத்தவாடை தெருவில் உள்ள ஒரு ஓட்டலில் சமையலராக பணியாற்றி வந்தார். ஒரு வேலை விஷயமாக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தேவனேரிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு மீண்டும் மாமல்லபுரத்துக்கு வந்து கொண்டிருந்தார்.

தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சி கழக பெட்ரோல் நிலையம் அருகில் வரும்போது திடீரென நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த கார்த்திகேயன் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு விபத்து

மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கிழக்கு கடற்கரை சாலையில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மாமல்லபுரம் நோக்கி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது புதுச்சேரி நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற மாமல்லபுரம் போலீசார் வாகனம் மோதி இறந்து கிடந்த முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story