விபத்தில் வாலிபர் பலி
விபத்தில் வாலிபர் பலியானார்.
சிவகங்கை
சிங்கம்புணரி,
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே ஆலம்பட்டியை சேர்ந்த செல்வம் மகன் குணசேகரன்(வயது 22). இவர் தனது நண்பரான அருண்குமாருடன் மோட்டார்சைக்கிளில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்கு வந்துவிட்டு மீண்டும் நேற்று முன்தினம் இரவு ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.
சிங்கம்புணரி-திண்டுக்கல் சாலை அரணத்தாங்குண்டு பகுதியில் வந்தபோது குறுக்கே வந்த மாடு மீது மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த குணசேகரன் உயிரிழந்தார். அருண்குமார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story