தூத்துக்குடியில்மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு


தூத்துக்குடியில்மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு
x
தினத்தந்தி 29 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-30T20:23:07+05:30)

தூத்துக்குடியில்மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பரிதாபமாக பலியானார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி தெர்மல்நகர் பகுதியை சேர்ந்தவர் கற்குவேல்ராஜ் (வயது 26). சம்பவத்தன்று இவர் முத்தையாபுரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். இவர் துறைமுகம் ரோட்டில் சென்ற போது, எதிர்பாராதவிதமாக நாய் குறுக்கே சென்றதால் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் தெர்மல்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story