மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த வாலிபர் பலி


மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த வாலிபர் பலி
x
தினத்தந்தி 1 Oct 2023 1:45 AM IST (Updated: 1 Oct 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

கோவை கொடிசியா அருகே வேகத்தடை மீது ஏறிய போது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோயம்புத்தூர்

கோவை கொடிசியா அருகே வேகத்தடை மீது ஏறிய போது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வேகத்தடை

கோவையை அடுத்த சூலூர் பகுதியை சேர்ந்தவர் அரிஹரன். இவருடைய மகன் சந்திரகாந்த் (வயது 25). இவர் காந்திமாநகரில் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன் தினம் இரவு தனது கடையை மூடிவிட்டு வீட்டிற்கு செல்வதற் காக மோட்டார் சைக்கிளில் கொடிசியா அருகே உள்ள தனியார் பள்ளி பகுதியில் வந்து கொண்டு இருந்தார்.

அப்போது சாலையில் போடப்பட்டு இருந்த வேகத்தடை மீது மோட்டார் சைக்கிள் ஏறியது. இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு நெஞ்சு, கழுத்து உள்ளிட்ட பகுதிக ளில் பலத்த காயம் ஏற்பட்டது.

வாலிபர் சாவு

உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோவை கிழக்கு போக்குவ ரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெறாமல் தனியார் பள்ளி அருகே 3 இடங்களில் வேகத்தடை சில நாட்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அங்கு வேகத்தடை இருப்பதை குறிக்கும் வகையில் வர்ணம் எதுவும் தீட்டப்பட வில்லை.

இதனால் இரவில் வரும் வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை சரியாக தெரியாததால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து நடந்ததும் இரவு நேரத்தில் வேகத்தடை மீது போலீசார் வர்ணம் தீட்டினர். பின்னர் சில காரணங்களால் வேகத்தடை அகற்றப்பட ்டது. இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாநகராட்சி நோட்டீஸ்

இதற்கிடையே வாலிபர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த காட்சியும், வேகத்தடைக்கு வர்ணம் தீட்டும் பணி காட்சியும் அடங்கிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த நிலையில் வேகத்தடை அமைத்த தனியார் பள்ளிக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் மாநகராட்சி சார்பில் உதவி என்ஜினீயர் போலீசில் புகார் அளித்து உள்ளார்.


Next Story