காரை ஏற்றி வாலிபர் படுகொலை


காரை ஏற்றி வாலிபர் படுகொலை
x

முதுகுளத்தூர் அருகே காரை ஏற்றி வாலிபர் படுகொலை செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கொழுந்தூரை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 21). இவர் முதுகுளத்தூர் கிழக்கு தெருவை சேர்ந்த அபினேஷ் (19) என்பவரிடம் கடந்த 2 மாதத்திற்கு முன்பு ரூ.35 ஆயிரம் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அபினேஷ் தனது நண்பர்களான சூர்யா என்ற சிவசுப்பிரமணியன், துரை, மலை கிருஷ்ணராம், கிருஷ்ணமூர்த்தி, வெங்கடேஸ்வரன் ஆகியோருடன் கொழுந்தூர் சென்று தினேஷ்குமாரிடம் பணம் கேட்டு உள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அபினேஷ் தனது நண்பர்களுடன் காரில் முதுகுளத்தூர் புறப்பட்டு உள்ளார்.

அப்போது தினேஷ் குமாரும் அவரது நண்பர் கீர்த்திவாசனும்( 20) மோட்டார் சைக்கிளில் அபினேஷின் காரை முந்தி செல்ல முயன்றனர்.அப்போது அபினேஷ் காரை தினேஷ்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் கீர்த்திவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் தினேஷ்குமார் பலத்த காயம் அடைந்து மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து கீழத்தூவல் போலீசார் வழக்கு பதிவு செய்து அபினேஷ் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்தனர்.


Related Tags :
Next Story