நின்று கொண்டிருந்த மொபட் மீது கார் மோதல்


நின்று கொண்டிருந்த மொபட் மீது கார் மோதல்
x
தினத்தந்தி 12 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-13T22:52:00+05:30)

திண்டிவனம் அருகே நின்று கொண்டிருந்த மொபட் மீது கார் மோதி 3 பேர் படுகாயம் அடைந்தனா்.

விழுப்புரம்

திண்டிவனம்

திண்டிவனம் அடுத்த ஊரல் கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பா மகன் சதீஷ்குமார்(வயது 28). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார்.

விடுமுறை நாளில் சொந்த ஊருக்கு வந்த சதீஷ்குமார் நேற்று காலை மொபட்டில் தனது குழந்தைகள் யஸ்வந்த்(3), மோனிஷா(2) ஆகியோருடன் ஊரல் பகுதி அருகில் சாலையோரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது புதுச்சேரியில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூரை நோக்கி வந்து கொண்டிருந்த கார் திடீரென மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சதீஷ்குமார் மற்றும் அவரது இரு குழந்தைகளையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ரோசணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story