வீடுபுகுந்து திருடிய வாலிபர் கைது


வீடுபுகுந்து திருடிய வாலிபர் கைது
x

ஆம்பூர் அருகே வீடுபுகுந்து திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

ஆம்பூர் அடுத்த நாச்சார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 40). இவர் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார். பின்னர் இரவு வீட்டுக்கு வந்தபோது மாடியின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் இருந்த 2 லேப்டாப்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில் அதேப்பகுதியை சேர்ந்த டேவிட் (25) என்பவர் பொருட்களை திருடியது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.


Next Story