14 வயது சிறுமியை காதல் திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர்
நாட்டறம்பள்ளி அருகே 14 வயது சிறுமியை காதல் திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளி அருகே ஒரு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை அவரது உறவினரான கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 20) என்பவர் காதலித்து வந்துள்ளார்.
பின்னர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சிறுமியை அவர் திருமணம் செய்து கொண்டு கிருஷ்ணகிரி பகுதியில் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் சிறுமி கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார்.
அப்போது சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. மேலும் சிறுமிக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை தர்மபுரி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.
இதனால் பெற்றோர் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அழைத்து சென்று பரிசோதனை செய்தனர் அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன்பேரில் கார்த்திக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் இதனையடுத்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.