மனைவியின் தங்கை மீது வசியமருந்து ஊற்றிய வாலிபர் கைது


மனைவியின் தங்கை மீது வசியமருந்து ஊற்றிய வாலிபர் கைது
x

ஆலங்காயம் அருகே மனைவியின் தங்கை மீது வசிய மருந்து ஊற்றிய வாலிபர் கைது

திருப்பத்தூர்

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயத்தை அடுத்த பூங்குளம் செட்டிவட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 23), கூலி தொழிலாளி.

இவர் அதே பகுதியை சேர்ந்த தேன்மொழி (21) என்பவரை 1½ ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார்.

குடும்ப பிரச்சினை காரணமாக, கடந்த 3 மாதங்களாக தேன்மொழி, ராஜேஷ் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு நடந்து சென்றுகொண்டிருந்த தேன்மொழியின் தங்கை தமிழ்மொழியை (19), ராஜேஷ் வழிமறித்து அவர் மீது வசியமருந்தை ஊற்றியதாக கூறப்படுகிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த தமிழ்மொழி கூச்சலிட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அருகே இருந்த ஊர் மக்கள் ஓடி வந்து அவரை மீட்டுள்ளனர். உடல் முழுவதும் எரிச்சல் இருப்பதாக தெரிவித்த அவரை உடனடியாக ஆலங்காயம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுகுறித்து, தமிழ்மொழி அளித்த புகாரின் பேரில், ஆலங்காயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜேஷை கைது செய்தனர்.


Related Tags :
Next Story