பிரபல ஓட்டலில் திருடிய வாலிபருக்கு 4 ஆண்டு சிறை


பிரபல ஓட்டலில் திருடிய வாலிபருக்கு 4 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 4 Feb 2023 12:15 AM IST (Updated: 4 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சுங்கச்சாவடி அருகே பிரபல ஓட்டலில் திருடிய வாலிபருக்கு 4 ஆண்டு சிறை உளுந்தூர்பேட்டை கோர்ட்டு தீர்ப்பு

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே உள்ள தனியார் ஓட்டலில் இரவு நேரத்தில் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் கடையில் இருந்த ரூ.5 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கம், ரூ.5 ஆயிரம் மதிப்பிலான செல்போன் ஆகியவற்றை திருடி சென்று விட்டார்.

இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பத்மநேரி பகுதியை சேர்ந்த காளிதாஸ் என்கிற ராஜா என்கிற காளியப்பன்(வயது 29) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு உளுந்தூர்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்ததை அடுத்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் காளியப்பனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து மாஜிஸ்திரேட்டு விஜயராஜேஷ் தீர்ப்பு கூறினார். இதையடுத்து காளியப்பனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story