கொத்தனாருக்கு கொலைமிரட்டல் விடுத்த வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை


கொத்தனாருக்கு கொலைமிரட்டல் விடுத்த வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை
x
தினத்தந்தி 22 Jun 2023 7:42 PM GMT (Updated: 23 Jun 2023 10:26 AM GMT)

கொத்தனாருக்கு கொலைமிரட்டல் விடுத்த வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை

தஞ்சாவூர்

கொத்தனாருக்கு கொலைமிரட்டல் விடுத்த வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கொலைமிரட்டல்

கும்பகோணம் சோலையப்பன் தெரு 4-ம் படித்துறை பகுதியை சேர்ந்தவர் அருண்ராஜ். இவரது மகன் சதீஷ் (வயது 31). கொத்தனார். அதே பகுதியைச்சேர்ந்தவர் முருகானந்தம்.

கடந்த 2019-ம் ஆண்டு ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முருகானந்தம், சதீஷ் ஆகியோருக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது 2 பேரையும் அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ந்தேதி சதீஷ் கும்பகோணம் எள்ளு குட்டை பகுதியில் உள்ள ஒரு மோட்டார் பம்பு செட்டில் குளிக்க சென்றுள்ளார்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த முருகானந்தம் சதீஷிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகானந்தம், சதீசை சரமாரியாக தாக்கி அவருக்கு கொலைமிரட்டல் விடுத்தார்.

2 ஆண்டுகள் சிறை

இதுகுறித்து சதீஷ் கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்தனர்.

இதுகுறித்த வழக்கு கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்.1ல் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், சதீசை கத்தியால் குத்தி கொலைமிரட்டல் விடுத்த முருகானந்தத்துக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


Next Story